தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி வாழக் தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே!

 

 

 

 

கல்லூரிக் கீதம்

தமிழ்மொழிக் கல்வி தரும் ஹோம்புஷ்

தமிழ்க் கல்வி நிலையம் வாழ்க

அமிழ்தினும் இனிய அருமை மொழியை

அகிலத்தில் பரப்பியே வாழ்க

(தமிழ்மொழிக்…)

கண்ணாக கல்வியையும் கலையையும் கருதும்

கலங்கரை விளக்கமாய் வாழ்க

தென் துருவத் தேசமாம் அவுஸ்திரேலியாவில்

தேமதுரத் தமிழோசை பரப்பியே வாழ்க

(தமிழ்மொழிக்…)

அழகான சிட்னி மாநகர் உதித்தே

ஆல் போல் தழைத்தே வளர்க

அன்பான எங்கள் ஆண்டவன் அருளினால்

எம் கல்வி நிலையம் வாழ்க!

(தமிழ்மொழிக்…)

வாழ்க வாழ்கவே! தமிழ் வாழ்க வாழ்கவே!!

இயற்றியவர்: திரு. ச. தேவராசா