அன்பான எமது பெற்றோர்களே!

எமது தமிழ்க் கல்வி நிலையத்தின் தமிழ்க் கதிர் மாணவர் சஞ்சிகைக்கான 2025 அரையாண்டு இதழையும், வகுப்பு ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் என்றல்லாது, கடந்த டிசெம்பர் 2024 இதழ் போன்று அனைத்து மாணவர்களின் பங்களிப்பை உள்வாங்க முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

எனவே உங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து ஆக்கங்களை வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்பதாக தத்தமது வகுப்பாசிரியரிடம் கையளிக்கவும்.

மாணவர்களின் ஆக்கங்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டியவை;

PRESCHOOL / LKG / UKG மாணவர்கள்
படங்கள் வர்ணம் தீட்டுதல்
படங்களை நிழல் பிரதி எடுத்து ஆசிரியருக்கு அனுப்புதல்

ஆண்டு 1 முதல் 6 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கைகளால் எழுதி, நிழல் பிரதி எடுத்து ஆசிரியருக்கு அனுப்புதல்

ஆண்டு 7 முதல் 10 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கணிணியில் தட்டச்சு (தமிழில் / Unicode font/ MS Word format) செய்து அனுப்புதல்

ஆண்டு 11 முதல் 12 வரை மாணவர்கள்
ஆக்கங்களை கணிணியில் தட்டச்சு (தமிழில் / Unicode font/ MS Word format) செய்து அனுப்புதல்

அனைத்து ஆக்கங்களும் வகுப்பு ஆசிரியரால் சஞ்சிகைக்கு அனுப்பப்படும்

உங்கள் ஆக்கங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்கள் வகுப்பு ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சில பரிந்துரைகள்
1. மாணவர் வரைந்த சித்திரம்
2. ⁠எனது விடுமுறை நாட்கள் அல்லது விடுமுறையில் ஒரு நாள்
3. ⁠நான் கொண்டாடிய பண்டிகை
4. ⁠நான் ரசித்த பாப்பா பாட்டு அல்லது சிறுவர் கதை – எழுதியவர் விபரத்துடன்
6. ⁠குறுக்கெழுத்துப் போட்டி (மேல் வகுப்பு மாணவர்)
7. ⁠நான் வாசித்த புத்தகம் (நூல் நயப்பு)
8. ⁠அவுஸ்திரேலியாவில் நான் கண்ட நிகழ்வு ஒரு பார்வை (மேல் வகுப்பு மாணவர்)
9. ⁠நான் சேகரித்த பிரதேச வழக்குத் தமிழ்ச் சொற்கள் (மேல் வகுப்பு மாணவர்)

இவை தவிர இந்த ஆண்டு பாடசாலையில் நிகழ்ந்த கொண்டாட்டங்கள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள், வெளியார் நிகழ்ச்சிகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்)

Dear Parents,

We sincerely hope our students are preparing articles for their student’s magazine, as instructed by their class teachers.

Articles need to be submitted as per the following,

PRESCHOOL / LKG / UKG Students:
Any drawings / paintings – Photo of the same to be submitted to the class teacher.

YEAR 1 to YEAR 6 Students:
Handwritten articles to be photographed and sent to the class teacher.

YEAR 7 to YEAR 10 Students:
Articles to be typed in Tamil in Unicode font – MS Word format

YEAR 11 & YEAR 12 Students:
Articles to be typed in Tamil in Unicode font – MS Word format

All articles will be reviewed and sent to the editorial by the class teacher.

For further information regarding the articles and magazine, kindly contact your class teachers.

All articles should be submitted on or before 14/06/2025 to your respective class teachers.

நன்றி
வணக்கம்

நிர்வாகக்குழு
தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்