அன்புள்ள பெற்றோர்களே, பாதுகாவலர்களே!
ஆண்டு 7, 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக விசேட வகுப்புகள்
சனிக்கிழமைகளில் நீண்ட காலம் தொடர்ந்து தமிழ் வகுப்புகளுக்கு வரமுடியாதுபோன ஆண்டு 7,8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட வகுப்புகள் பரீட்சார்த்தமாக நடைபெறுகின்றன. இவ்வகுப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் கல்விநிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
காலம்: ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை
Student Information Update 2016
Please update your child information online. This will help us to update our database. Your child information should be similar to the one you have given to the mainstream school. Your correct infomration will help us to secure the state funding and able to contact you during emergency. In addition to this, your information will also help us to write your child name correctly on the certificates.
பாடற்குழுவில் புதியமாணவர்களைச் சேர்த்தல்
எமது பாடசாலையின் பாடற்குழுவில் சேர விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பொறுப்பாசிரியர் திருமதி.புவனேஸ்வரி புருஷோத்தமர் அவர்களிடம் பதிவு செய்யவும். மாணவர்கள் ஆண்டு 3 முதல் பாடற்குழுவில் பங்குபற்றலாம்.
பாடசாலைக்கட்டணம்
தமிழ்க் கல்வி நிலையத்தின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கம் தரும் பணத்தை விட அதிகமாக தேவைப் படுவதால், பெற்றோர்களாகிய நீங்கள் தயவு செய்து பாடசாலைக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு மிகவும் பணிவன்புடன் நிர்வாகக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். நீங்கள் கட்டவேண்டிய நிலுவையை கல்வி நிலைய பொருளாளர் இடம் கேட்டுஅறியலாம். எமது தேவைகளை அறிந்து முன் கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு எமது அன்பான நன்றி.
உங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூடக் கட்டணத்தை நேரடியாக பள்ளிக்கூட வங்கிக் கணக்கிலிடலாமே
வங்கி விபரம்:
Name of Bank: Commonwealth Bank
Name of Branch: Strathfield
Account Name: TAMIL STUDY CENTRE HOMEBUSH
BSB number: 06 2180
Account Number: 1005 6237
Reference: Your child’s name and the class
மாதாந்தப் பரீட்சை
தமிழ்க் கல்வி நிலையம், மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மாதாந்தம் கேட்டுக்கிரகித்தல், உரையாடல், எழுத்து, வாசித்தல் ஆகிய மதிப்பீடுகளையும், அரையாண்டு, ஆண்டு இறுதிப்பரீட்சையுடன் நடாத்தி வருகின்றது. உங்கள் பிள்ளைகளை இதில் பங்குகொள்வதற்கு நீங்கள் அவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இத்தினங்களை நாங்கள் உங்களிடம் தந்திருக்கும் கால அட்டவணையிலிருந்து அறியலாம்.